வியாழன், 25 ஜூலை, 2024

எத்தனை ஈன்றிலை கலித்துறை

எத்தனை யீன்றிலை முத்தனை யென்றாலு மீன்றவளி
னத்தனை யின்பமு நித்தமும் பெற்றனண் முத்திதரும்
வித்தினை யன்பெனுஞ் சொத்தினா லாண்டனண் மீதவத்தாற்
சித்தினைப் பெற்றவர் வித்தையைப் பார்த்துத் திகைப்புறவே
-கட்டளைக் கலித்துறை

 

 

எத்தனை ஈன்றில்லை முத்து அன்னை என்றாலும் ஈன்றவளின்
அத்தனை இன்பமும் நித்தமும் பெற்றனள் முத்தி தரும்
வித்தினை அன்பெனும் சொத்தினால் ஆண்டனள் மீ தவத்தால்
சித்தினைப் பெற்றவர் வித்தையைப் பார்த்துத் திகைப்பு உறவே

கள்வனைத் (கண்ணனைத்) தான் பெற்றெடுக்க வில்லை என்றாலும் முத்து போன்ற சிறப்பான தாயான அசோதை ஈன்றெடுத்த தேவகியை விட அத்தனை இன்பமும் நித்தமும் அனுபவித்தாள் முத்திக்கு வித்தான பரமனை அன்பென்னும் சொத்தினால் ஆண்டாள், மிகுந்த தவம் செய்யும் சித்தர்கள் கூட இத்தக அரிய இவளது வித்தையைப் பார்த்துத் திகைக்குமாறு !


No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...