மந்திபாயும் வெற்புடைத்த வேங்கடேசன் மருகனே
யிந்துசூடு மெந்தையீச னின்பமுத்து மைந்தனே
தந்திகொம்பை யன்புடைத்த தண்டையேந்து நாதனே
செந்தினாதன் சிந்தையாள சந்தமாள சிந்தையே
மந்தி பாயும் வெற்பு உடைத்த வேங்கடேசன் மருகனே
இந்து சூடும் எந்தை ஈசன் இன்ப முத்து மைந்தனே
தந்தி கொம்பை அன்பு உடைத்த தண்டை ஏந்து நாதனே
செந்தில் நாதன் சிந்தை ஆள சந்தம் ஆள சிந்தையே
மந்திகள் பாயும் மலையான திருவேங்கட மலைக்குரிய வேங்கடேசன் மருகனே
தலையில் திங்களைச் சூடும் எந்தை ஈசனின் இன்ப முத்துக் குமரா
தெய்வானையின் அன்பிற்கு உரியவனே கையில் தண்டை ஏந்தி நிற்கும் பழனி ஆண்டவா
திருச்செந்தூர் உறையும் செந்தில் நாதா , நீ என் சிந்தையை ஆளும் போது சந்தப் பா எழுதுவதில் எனக்கென்ன கவலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக