வியாழன், 18 ஜூலை, 2024

பிறப்பிறப்பு வெண்பா

பிறப்பிறப்பைப் போக்கும் பிரானிடஞ் சென்று
பிறபிறப்பை வேண்டிப் பிறழா - திறப்பிறப்பைத்
தந்தருளுஞ் சீரலைவாய் நாதன் பதம்பணிந்து
வெந்தழல் வேலை விடு

சீர் பிரித்து 

பிறப்பு இறப்பைப் போக்கும் பிரானிடம் சென்று
பிற பிறப்பை வேண்டி பிறழாது இறப்பு இறப்பை
தந்து அருளும் சீரலைவாய் நாதன் பதம் பணிந்து
வெந்தழல் வேலை விடு
 

பொருள்  

பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியைப் போக்க வல்ல இறைவனிடம் சென்று இப்போது உள்ள நிலையை விட உயர்ந்த பிறப்பை நல்கும் படி வேண்டுதல் பிறழ்ச்சி, அவ்வாறு செய்யாது இறப்பின் இறப்பை (சாகா நிலை -முத்தி) வழங்கும் திருச்செந்தூர் முருகனின் பதம் பணிண்து இவ்வெந்தழலான பிறவிப் பெருங்கடலை விடுவோமாக

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி