வியாழன், 18 ஜூலை, 2024

புனல் அணி சடையன் கலி விருத்தம்

தனனன தனனா  

புனலணி சடையா பொடியணி விடையா
அனலுடை விழியா லழகனு(ம்) பொடியா
தனிநடை யரையா தவவுமை யடையா
பனியுறை மலையா பதமளி நிலையா
#கலிவிருத்தம்


சீர் பிரித்து 

புனல் அணி சடையா பொடி அணி விடையா
அனல் உடை விழியால் அழகனும் பொடியா
தனி நடை அரையா தவ உமை அடையா
பனி உறை மலையா பதம் அளி நிலையா

பொருள் 

 கங்கையைச் சடையில் அணிந்தவனே திருநீற்றை அணிந்தவனே விடை வாகனனே அனல் விழியால் காமனைப் பொசுக்கியவனே
தனிப்பெரும் நடனம் புரியும் நடராஜா உமையம்மையின் தவத்தின் அடைவாக விளங்கியவனே உறையும் பனி எப்போதும் உள்ள மலையில் உறைபவனே எமக்குப் பதம் தருவாய் நிலையானவனே/ அல்லது எமக்கு நிலையான பதம் தருவாய் (நிறைகதி -வீடு) அல்லது நிலையான சொற்கள் உன்னைப் போற்ற என்றும் கொள்ளலாம் 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...