சனி, 20 ஜூலை, 2024

களிறு உரியனே கலி விருத்தம்

களிறி னுரியனே கழக முதல்வனே
யொளிறு மலையனே யுயிரி லுறைவனே
தளிர மடியனே தவசி முதல்வனே
வளர வறியனை வகைசெ யபயனே
#கலிவிருத்தம்

 

 

களி(ற்)றின் உரியனே (தமிழ்க்)கழக முதல்வனே
ஒளிறும் மலையனே உயிரில் உறைவனே
தளிர் அம் அடியனே தவசி முதல்வனே
வளர வறியனை வகை செய் அபயனே


ஆனையின் உரியைத் தரித்தவனே, தமிழ்ச் சங்கத்தை உருவாக்கியவனே ,அருணாசலனே , உயிரினுள்ளும் உறைபவனே, தளிர் போன்ற திருவடிகளை உடையவனே தவசிகளின் தலைவனே இவ்வறியனையும் வளர வகை செய்வாயாக அபயனே !

Shiva Mahadev Religion - Kostenloses ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி