வெள்ளி, 19 ஜூலை, 2024

அறிதுயிலரியா வஞ்சித்துறை

அறிதுயிலரியா விரிசடையிறையா
குறமகளிறையா குழலழகுமையா
வறுவழியுனதா வருவுருவகையா
சிறைபிணிவிடியா பிறைமதியழகா   

சீர் பிரித்து

அறி துயில் அரியா விரி சடை இறையா
குறமகள் இறையா குழல் அழகு உமையா
அறு வழி உனது ஆ அரு உரு வகையா
சிறை பிணி விடி ஆ பிறை மதி அழகா  

பொருள் 

அறி  துயில் கொள்ளும் அரி விரி சடை உடைய அரன்
குறமகள் கேள்வன் முருகன் குழல் அழகு பொருந்திய உமை
அனைவரும் நீ தானோ என்ற கேள்வியாகவும் அல்லது அதுவே
பதிலாகவும் கொள்ளலலாம் , அறு சமயம் உனது வழியோ?
அரு உரு நிலையும் நீ அன்றோ , அது எவ்வாறாயினும் , பிணியில்
சிறைப்பட்டுத் தவிக்கும் உயிர்களை , விடிவிப்பாயாக பிறை மதி அழகா/ இறைவா !

See related image detail. Shriman Narayan Narayan Hari Bol - YouTubeImage result for சிவன் குடும்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி