நீர்துயின்ற நேமியானி னெஞ்சகத்தில் வாழ்ந்திடு
நீர்பிறந்த நேரிலாளின் நின்றகோல தாளிணை
நீர்சொரிந்து பூசைசெய்யுங் கார்மலிந்த வானைதன்
பார்பிறந்த வாழ்வுயர்த்தும் பார்க்கவிந்த காட்சியே
#கலிவிருத்தம்
சீர் பிரித்து
நீர் துயின்ற நேமியானின் நெஞ்சகத்தில் வாழ்ந்திடும்
நீர் பிறந்த நேர் இ(ல்)லாளின் நின்ற கோலத் தாள் இணை
நீர் சொரிந்து பூசை செய்யும் கார் மலிந்த ஆனை தன்
பார் பிறந்த வாழ்வு உயர்த்தும் காண இந்தக் காட்சியே
பொருள்
நீரின் கண் ( பாற்கடலில்) துயிலும் நேமியானின் ( திருமாலின்) நெஞ்சகத்தில் வாழ்ந்திடும்
நீர் பிறந்த ( பாற்கடலில் இருந்து உதித்த) நேரிலாள் ( நிகரற்றவளான) திருமகளின் நின்ற கோலத் தாளிணை மேல் நீர் சொரிந்து பூசை செய்யும் கரு நிற யானை தன் காட்சியைக் காண , இப்பாரில் நாம் வாழ்வுற்ற பிறப்பு உயருமாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக