வெள்ளி, 26 ஜூலை, 2024

திருவடி கலிவிருத்தம்

வானுலாவு மாநதிக்கு மாண்பளித்த மேன்மையுங்
கானுலாவு மாயமானைத் தேடியோடிச் சென்றதும்
பானிலாவின் பகையடங்கப் பைந்நடித்த பாதமே
கூனிலாவும் வாழ்வொடுங்கக் கூற்றினின்று காக்குமே
#கலிவிருத்தம்



வான் உலாவும் மா நதிக்கு மாண்பு அளித்த மேன்மையும்
கான் உலாவும் மாய மானைத் தேடி ஓடி சென்றதும்
பால் நிலாவின் பகை அடங்க பை நடித்த பாதமே
கூன் நிலாவும் வாழ்வு ஒடுங்கக் கூற்றினின்று காக்குமே

வான் உலாவும் மா நதி - கங்கை
பால் நிலாவின் பகை - பாம்பு (இராகு கேது நிலவுக்குப் பகை)
அந்த அடிப்படையில் பொதுவாக அரவைக் குறிக்குமாறு இங்கு குறிப்பால் காளிங்கனைக் குறுக்கின்றது

கங்கை நதிக்கு மேன்மை அளித்த (வாமனனின்), மாயமானைத் தேடி ஓடிய (இராமனின்) , காளிங்கன் மீது நடனம் புரிந்த (கண்ணனின்) பாதமே (திருவடியே) கூன் விழுந்து ஒடுங்கும் இவ்வாழ்வு அடங்கும் போது
நம்மைக் கூற்றினின்று காக்கும் !

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி