வெள்ளி, 26 ஜூலை, 2024

வளசை வேங்கட சுப்பிரமணியர் கலி விருத்தம்

மெய்ம்மறந்து மெய்ம்மனுன்றன் மெய்யுகந்து கோவிலில்
பொய்ம்மறைந்து பூசைசெய்யும் போகமேக போகமே
உய்ம்மினென்று ளங்கவர்ந்து யிர்த்தெழுந்த மூர்த்திநீ
வைம்மலர்ந்து  வாழவைக்கும் வளசரத்தின் வேலனே

கலிவிருத்தம் 



மெய் மறந்து மெய்ம்மன் உன்றன் மெய் உகந்து கோவிலில்
பொய் மறைந்து பூசை செய்யும் போகம் ஏக போகமே
உய்மின் என்று உளம் கவர்ந்து உயிர்த்து எழுந்த மூர்த்தி நீ
வை மலர்ந்து வாழ வைக்கும் வளசரத்தின் வேலனே

பக்தர்கள்  மெய்ம்மறந்து உண்மைப் பொருளான உன் மேனியை உகந்து
உள்ளத்தில் இருக்கும் பொய்கள் எல்லாம் மறைந்து பூசை செய்யும் இன்பமே ஒரு தனி இன்பமாம்!
அவ்வாறு பக்தர்கள் உய்ய அவர்கள் உள்ளம் கவரும் படியாக உயிர்த்து எழும் மூர்த்தியான நீ
இவ்வுலகம் மலர்ந்து வாழ வைப்பதற்கன்றோ வளசரவாக்கத்தின் இக்கோவிலில் தங்கி உள்ளாய் வேலனே 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...