ஞாயிறு, 28 ஜூலை, 2024

பார்மகள் மீட்க கட்டளைக் கலித்துறை

பார்மகண் மீட்கப்  பழமறை காக்கப் பொதிமலிந்த
பார்மகண் மீட்கப் பகைவரை வீழ்த்தப் பிரிந்ததிரு
பார்மகண் மீட்கப் பழவரை தாங்கப் பிறப்பெடுத்த
தார்மகன் கேட்கத்  தமிழ்மறை செல்லுந் தலையெனவே



பார் மகள் மீட்கப் பழ மறை காக்கப் பொதி மலிந்த
பார் மகள் மீட்கப் பகைவரை வீழ்த்தப் பிரிந்த திரு
பார் மகள் மீட்கப் பழ வரை தாங்கப் பிறப்பு எடுத்த
தார் மகன் கேட்கத்  தமிழ் மறை செல்லும் தலை எனவே

வராகராக பூமி தேவியை மீட்க ,  ஹயக்ரீவராக வேதங்களைக் காக்க
பூபாரம் போக்க கண்ணனாக , பரசுராமராக பகை சத்திரியர்களை வீழ்த்த
பிரிந்த திரு , பூமியின் மகளான சீதையை மீட்க இராமனாக , பண்டை மேரு மலையைத் தாங்க கூர்மமாக அவதரித்த தார் மாலை  சூடும் திருமால் , தமிழ்மறை ஓத அதனைக் கேட்டடி ரசித்து அதன் பின் செல்வார் !

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி