ஞாயிறு, 28 ஜூலை, 2024

மாற்றுதித்த மாருதி கலி விருத்தம்

மாற்றுதித்த மாருதியு மதுரபாடைச் செப்பிடக்
கூற்றொடுங்க முடிவெடுத்த குணவதியுங் கேட்டெழத்
தேற்றளித்த ராமன்விரன் மோதிரத்தைப் பெற்றபின்
மாற்றளித்த மாமணிக்கு வையமேழு மீடதோ

#கலிவிருத்தம்

படம்



மால் துதித்த மாருதியும் மதுர பாடை செப்பிட
கூற்று ஒடுங்க முடிவு எடுத்த குணவதியும் கேட்டு எழ
தேற்று அளித்த ராமன் விரல் மோதிரத்தைப் பெற்ற பின்
மாற்று அளித்த மா மணிக்கு வையம் ஏழும் ஈடு அதோ

திருமாலை என்றும் துதிக்கின்ற மாருதி மதுர மொழியில் பேச, மனம் நொந்து கூற்றுக்குத் தன்னை இரையாக்கிக் கொள்ள எண்ணிய குணவதியான சீதா தேவி அதனைக் கேட்டு மனவெழுச்சி அடைந்தனள் , பின்பு தேற்றமளிக்கும் இராமனின் மோதிரம் ஆஞ்சனேயரிடம் பெற்றபின், பதிலுக்கு அவள் தனது மணியை மாருதிக்களித்தாள் இப்பரிசிக்கு உலகமேழும் ஈடாகுமோ ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி