சனி, 27 ஜூலை, 2024

நாரணன் நாமமே கட்டளைக் கலித்துறை

நாரண னாமமே யாவியென் றோதுவர் நன்றிருக்க
நாரண னாமமே யாவியென் றோதுவர் நாணமிலா
நாரண னாமமே யாவியென் றோதுவர் நாமுழல
நாரண னாமமே யாவியென் றோதுவர் நன்றுரையே

-கட்டளைக்கலித்துறை 



நாரணன் நாமமே ஆவி என்று ஓதுவர் நன்று இருக்க
நார் அணல் நாமமே ஆவி என்று ஓதுவர் நாணம் இல்லா
நாரணன் நாமமே ஆவி என்று ஓதுவர் நாம் உழல
நாரணன் நாமமே ஆவி என்று ஓதுவர் ? நன்று உரையே

நாரணன் நாமமே நமக்கு உயிர் என்று ஓதும் அன்பர்கள் வாழ்வில் நன்றிருக்க
அன்பைப் போதித்த அண்ணல் கர்த்தரின் நாமமே வலிமை தரும் என்று ஓதுபவர்கள் , நாணமின்றி
நாராயணன் நாமமே பரிசுத்த ஆவியைத் தான் குறிக்கும் என்றும் பிரச்சாரம் செய்வர் நாம் நமது மரபிலிருந்து உழல , இது இவ்வாறு இருக்க அஷ்டாக்ஷர மந்திரமான நாராயணன் நாமமே தன் மூச்சாகக் கருதி என்று தான் ஓதுவார்களோ ( உண்மைநெறி வழுவினர்கள்) நன்கு உரைப்பாயாக !

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி