திங்கள், 22 ஜூலை, 2024

குரு பூர்ணிமா வெண்பா

குருவரு ளொன்றே திருவருள் கூட்டு
மிரவிரு ணீக்கு மிரவி - யருமருந்
தீதென  வீதா னிறைவன் முறையொழுகி
நீதா னிறைய மதி
#வெண்பா



குரு அருள் ஒன்றே திரு அருள் கூட்டும்
இரவு இருள் நீக்கும் இரவி - அருமருந்து
ஈது என ஈதான் இறைவன் முறை ஒழுகி
நீதான் நிறைய மதி


குரு என்று தொடங்கி நிறை மதி என்று முடிய எழுதியது

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி