திங்கள், 22 ஜூலை, 2024

கலியின் பெருவலி கலி விருத்தம்

கலியின் பெருவலீ களையு பெருவலீ
மலையி னொருவிலீ மதனை யுருவிலீ
கலையங் கரவிலீ கருணை கரவிலீ
வலையின் விடிதலீ வனிதை யகவிலீ
#கலிவிருத்தம்

சீர் பிரித்து

கலியின் பெரு வலி களையும் பெரு வலீ
மலையின் ஒரு விலீ மதனை உரு இலீ
கலை அம் கர இலீ கருணை கரவு இலீ
வலையின் விடிதல் ஈ வனிதை அக இலீ

பொருள் 


பெரும் வலியைக் கொடுக்கக் கூடிய கலியுகத்தின் தீமையைக் களையும் பெரும் வலிமை யுடையோனே ஒரு மலை (மேருவை) வில்லாகக் கொண்டோனே காமனின் உருவை அழித்தோனே அழகு மானுக்கிருப்பிடமாக இருப்போனே உயிர்களின் மீதுள்ள கருணையால் கரவு எனும் தொழில் புரிபவனே இல்லாளான வனிதையாகிய உமையம்மையைத் தன்னகத்தே உடையோனே , பிறவி எனும் இவ்வலையில் சிக்கித் தவிக்கும் ஆக்களுக்கு விடிவை ஈவாயாக

Lord Shiva hd Wallpaper

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி