திங்கள், 22 ஜூலை, 2024

மாதவன் மாலவன் கலி விருத்தம்

மாதவன் மாலவன்  வாசவன் வேதவன்
போதவன் தாதவன் தூதவன் வாதவன்
சேதவன் சாதவன் கோதிலா வாதவன்
ஓதவன் யாதவன் சூதவன் யாதுமே

#கலிவிருத்தம்

 

 


1.
மாது அவன் மால் அவன் வாசு அவன் வேது அவன்
போது அவன் தாது அவன் வாது அவன் தூது அவன்
சேது அவன் சாது அவன் கோது இல்லா ஆதவன்
ஓது அவன் யாது(ம்) அவன் சூது அவன் யாதுமே

பெண்ணும் அவன் , பெண் ஏற்படுத்தும் மயக்குமும் அவன் , புல் அவன் , மருந்து அவன் , காலம் அவன் , ஐம்பூதங்களும் அவன் ,  சண்டைகளும் அவன், அச்சண்டையைத் தீர்க்கும் பாலமும் அவன் , நல்ல மனமுள்ள சாதுக்களும் அவன் , குற்றமற்ற சூரியன் அவன் ,ஓதப்படும் வேதங்களும் அவன் , யாதும் அவன் சூது ஏனென்றால் அவன் தான் யாவுமாக உள்ளான (அந்தர்யாமியாக)

2.
மாதவன் மாலவன் வாசவன் வேதவன்  
போதவன் தாத வன்  வாது அவன் தூதுவன்  
சே தவன் சாது  அவன் கோது இல்லா ஆதவன்  
ஓதவன் யாதவன் அவன் சூது யாதுமே

வருவபவன் மாதவனான திருமால் , வாசுதேவன் (இந்திரனாக வருபவனென்றும் கொள்ளலாம்) வேதவனான மலரில் அமரும் பிரம்மாவின் தாதை (தந்தை) அவன் வன் வாதான மாபாராதம் அவனே! அதைத் தீர்க்கும் தூதவனாக தடுக்க வந்தவனும் அவனே , செம்மை நிறம் கொண்ட  என்றும் தவத்தில் உள்ள சாதுவான சிவ பெருமானும் அவன், குற்றமற்ற சூரியன் அவன் , பாற்கடலில் துயிலும் நாரணன் அவன், யாதவனாக கண்ணனாக உதித்தவனும் அவனே , இப்பிரபஞ்சத்தின் அனைத்து சூதும் ( மாயையும்) அவனதே!

 

படம்


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...