வெள்ளி, 19 ஜூலை, 2024

கண்ணன் கலிவிருத்தம்

கள்வனென்று கோகுலத்திற் கண்ணனாக வந்தனை
புள்வனன்று வாய்பிளந்து பூதனையைச் செற்றனை
கொள்வனென்று போர்தொடுத்த கௌரவர்கண் மாய்த்தனை
யுள்வனென்று முன்னதாவுன் மேன்மையான கீர்த்தியே 



கள்வன் என்று கோகுலத்தில் கண்ணனாக வந்தனை
புள் வன் அன்று வாய்பிளந்து பூதனையைச் செற்றனை
கொள்வன் என்று போர் தொடுத்த கௌரவர்கள் மாயத்தனை
உள்வன் என்றும் உன்னதா உன் மேன்மையான கீர்த்தியே  

வெண்ணை மற்றும் இதயக் கள்வனாகக்  கண்ணனாக அவதரித்தவன்
வன் புள்ளின் வாய்பிளந்து பூதனையையம் கொன்றான்
பாண்டவர்களின் இராச்சியத்தைக் கொள்வேன் என்று போர்தொடுத்த கௌரவர்களையும் மாய்த்தான்
அப்பேற்பட்ட உன்னதனான கண்ணபிரானின் மேன்மையான கீர்த்தியை நான் என்றும் மனதில் தியானித்து இருப்பேன் 

Krishna Leela


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி