வியாழன், 18 ஜூலை, 2024

ஒருவரை சிலையா

ஒருவரை சிலையா வுருவரு நிலையா
புரமெரி நகையா புனலணி சிகையா
சிரமுறை பணியா சிதமுறை பணியா
குருவரு குமரா குணமளி பரமா  



ஒரு வரை -  தனிப்பெரும் மேரு மலை
சிலையா - அதை வில்லாகக் கொண்டவனே
உரு அரு நிலையா - அரு உரு / உருவரு என்ற நிலைகளில் விளங்குபவனே
புரமெரி நாகையா - நகைத்தே திரிபுரங்களை எரித்தவனே
புனலணி சிகையா =கங்கையைச் சிகையில் அணிபவனே
சிரமுறை பணியா - சிரத்தில் பாம்பைத் தாங்கியவனே
சிதம் உறை பணி ஆ - உன்னைப் பணியும் உயிர்களுக்கு என்றும் சித்தத்தில் உறைந்து உணர்வூட்டுபவனே
குருவரு குமரா - தனக்குத் தானே குருவாக முருகனாக வந்தவனே / குருவாக வரும் என்றும் இளமை மாறாதவனே - தட்சிணா மூர்த்தி
எமக்கு குணமளி ( நன்னெறி பின்பற்றும் படி வரமளி ) பரமனே 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...