வெள்ளி, 19 ஜூலை, 2024

அடியர் அருகனே கலி விருத்தம்

அடியர ருகனே யமர ரரசனே
நெடியன் வலவனே நிகரில் புகழனே
துடியை யுடையனே துரிய நிலையனே
விடமு மமுதமே விமலன் பருகவே 



அடியர் அருகனே அமரர் அரசனே
நெடியன் வலவனே நிகரில் புகழனே
துடியை உடையனே துரிய நிலையனே
விடமும் அமுதமே விமலன் பருகவே

அடியவர்க்கென்றும் அருகிலே இருப்பவனே. தேவர்கள் கோனே
திருமாலின் வலப்பக்கம் உறைபவனே, நிகரில்லாப் புகழுடையவனே,
உடுக்கையை உடையவனே. விழிப்புறக்கங் கனாவைத் தாண்டிய
துரிய நிலையனே நீ பருக கொடிய நஞ்சும் அமுதென்றாயிற்றே !

Painting of Lord Shivan Parvathi family Picture Gift Photo Card

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...