தகனம் பயிலிடந் தளர்வில் புரிநடம்
ககனம் விரிசடை கனக வரையிடை
குகனங் கரிமுகன் குறையி லுமையுடன்
றிகழும் புரமெரி விமல னடிபணி
#கலிவிருத்தம்
சீர் பிரித்து
தகனம் பயில் இடம் தளர்வு இல் புரி நடம்
ககனம் விரி சடை கனக வரை இடை
குகன் அம் கரி முகன் குறை இல் உமை உடன்
திகழும் புரம் எரி விமலன் அடி பணி
பொருள்
தகனம் பயிலும் இடமான சூடு காட்டில் தளர்வில்லாது நடனம் பயிலும் , ஆகாயத்தை தனது விரி சடையாகக் கொண்ட , கனக மாலையில் முருகன் , வினையாகர் உமையம்மை யுடன் திகழும் திரிபுரங்களை எரித்த விமலனான ஈசனின் அடியைப் பணிவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக