செவ்வாய், 2 ஜூலை, 2024

முருகன் கலிவிருத்தம்

 

தேரழுந்தப் பார்த்தனுயிர் போர்களத்திற் காத்தநல்
காரணிந்த நீலமேனி கண்ணனாரின் மருகநின்
சூரொடுங்க நீலமயில் சேவலென மாற்றிய
சீரணிந்த தார்மார்பன் சிந்தையாள சிந்தையே
தேர் அழுந்த பார்த்தன் உயிர் போர் களத்தில் காத்த நல்
கார் அணிந்த நீல மேனி கண்ணனாரின் மருக நின்
சூர் ஒடுங்க நீல மயில் சேவல் என மாற்றிய
சீர் அணிந்த தார் மார்பன் சிந்தை ஆள சிந்தையே?
 
பொருள் :- 
மாபாரதப் போர்க்களத்தில் தேரை அழுந்தச் செய்து அர்ஜுனனின் உயிரைக் காபற்றிய மேகங்கள் அணிந்ததைப் போல நீல மேனி உடைய கண்ண பிரானின் மருகனான , சூரன் ஒடுங்க அவனை நீல மயிலாகவும் சேவலாகவும் மாற்றிய சீரான தாரை ( மாலையை) தன் மார்பில் அணிந்தவனான நின் சிந்தை எம்மை ஆள எமக்கு ஏது சிந்தை ( கவலை)  
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி