சனி, 6 ஜூலை, 2024

குருவார குருமூர்த்தி வெண்பா

ஆறகத்தி னின்ற வருணா சலன்மைந்த
னூறகற்று நாம முணர்ந்துணர்ந் - தீறகத்தும்
பாரகத்தும் பேறளிக்கும் பால குருமூர்த்தி
யேரகத் தீசனை யேத்து

#வெண்பா 

 

 

ஆறு அகத்தில் நின்ற அருணாசலன் மைந்தன்
ஊறு அகற்றும் நாமம் உணர்ந்து உணர்ந்து ஈறு அகத்தும்
பார் அகத்தும் பேறு அளிக்கும் பால குருமூர்த்தி
ஏரகத்து ஈசனை ஏத்து 

ஆறகம் - ஆறு படை வீடுகள் 

ஈறகப் பேறு - பரசுகம் 

பாரகப் பேறு - இகசுகம் 

ஏரகம் - திருவேரகம் / சுவாமி மலை 

 

Swaminathaswami Temple : Swaminathaswami Swaminathaswami Temple Details |  Swaminathaswami- Swamimalai | Tamilnadu Temple | சுவாமிநாத சுவாமிஇன்று அருணகிரிநாதர் குருபூஜைமுருகனின் நான்காவது படை வீடு : சுவாமிமலை | swamimalai hotels murugan temple


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி