சனி, 6 ஜூலை, 2024

திருக்கடிகை விருத்தம்

 யோகம ருருவில் வீறிரு மரியை
    வேதனை தீர  வரம்வேண்டி
யோகிகள் பணியு மாளரி யிறையை
     யோரெழில் கடிகை மலையேறி

தேகமு மொளிரத் தீவினை யொழியச் 
    சீரக மிளிரத் தொழுவோர்க
டீவினை யெரிய வாலம ரடியன்
    ராமனி னாம நிதமேத்து

மாகம மறிய  வாரண  மறிய  
    வேரண முறையே பயின்றோனை
யாதவ னழகு வானுறை கனியா
    யாசையி லுணவே முயன்றோனை

மோகமு மொழிய மோனமு மொளிர
    மூதுல குறையு  முனிவோனின்  
காதலி லுருகிக் கடிமல ரணவித்  
     தாளிணை முதலிற் பணிவாரே 


   
சீர் பிரித்து :-
யோகு  அமர் உருவில் வீறு இரும் அரியை
வேதனை தீர வரம் வேண்டி
யோகிகள் பணியும் ஆளரி இறையை
ஓர் எழில் கடிகை மலை ஏறி

தேகமும் ஒளிரத்  தீ வினை ஒழியச் 
சீர் அகம் மிளிரத் தொழுவோர்கள்
தீவினை எரிய வால் அமர் அடியன்
ராமனின் நாமம் நி(த்)தம் ஏத்தும்

ஆகமம் அறிய ஆரணம் அறிய
ஏரணம் முறையே பயின்றோனை
ஆதவன் அழகு வான் உறை கனியாய்
ஆசையில் உ(ண்)ணவே முயன்றோனை

மோகமும் ஒழிய மோனமும் ஒளிர
மூது உலகு உறையும் முனிவோனின்
காதலில் உருகிக் கடி மலர் அணவித்
தாளிணை முதலில் பணிவாரே  

பொருள் -
யோகமர் உரு அரி  - யோகத்தில் அமர்ந்திருக்கும் யோக நரசிம்மர்
ஆளரி - நரசிம்மர்
கடிகை மலை - சோளிங்கபுரம்

தீவினை எரிய - இலங்கை என்னும் தீவை எரிய வைத்த
வால் அமர் அடியன் - தனது வாலையே அரியாசனமாக அமைத்து அதன்மீது அமர்ந்த
ஏரணம் - இலக்கணம்  

 

யோகத்தில் அமர்ந்திருக்கும் சிங்கத்தை , வேதனை தீர வரம் வேண்டி யோகிகள் பணியும் நரசிம்மரை ஒப்பற்ற எழில் கொண்ட கடிகை மலையின் மீது ஏறி தேகம் ஒளிரும் பொருட்டு தீவினை ஒழியும் பொருட்டு மனம் சீராக மிளிரும் பொருட்டு தொழுபவர்கள் 

இலங்கை எனும் தீவு எரியும்படி தனது வாலையை அரியாசனமாக அமைத்து அதன் மீது அமர்ந்த தூதனான இராமரின் நாமத்தை எப்போதும் ஏத்திக் கொண்டு இருப்பவருமான . ஆகமம் , வேதம் இலக்கணம் எல்லாம் நன்கு கற்ற , சூரியனை வானில் உள்ள ஒரு அழகு கணியாக எண்ணி அதனை உண்ண ஆசைப்பட்ட , மோகம் ஒழிய , மோனம் ஒளிர இப்பழமையான உலகில் வீற்றிருக்கும் முனிவானான ஆஞ்சநேயரை , அன்பில் உருகி , நறுமண மலர்களால் அவர் தாலினைகளை முதலில் தொழுவார்கள்  

படம்

   படம்
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...