புதன், 24 ஜூலை, 2024

அரிதிரு மருகா கலி விருத்தம்

அரிதிரு மருகா வருளளி விலகா
குருவரை யிருகா குருகுக வருகா
சிரகிரி முருகா சுரகுல செருகா
வரவரை குழகா வணியயித் கரகா
#கலிவிருத்தம்



அரி திரு மருகா அருள் அளி விலகா
குரு வரை இரு கா குருகுக அருகா
சிர கிரி முருகா சுர குல செரு கா
அர வரை குழகா அணி அயில் கர கா

அரி திருமகள் மருகனே , விலகாதெமக்கருளளிப்பாயாக
சோலைகளுள்ள சுவாமி மலையில் சிவ பெருமானுக்கு குருவாகத்  திகழ்ந்தவனே, சென்னி மலை முருகா தேவர்கள் குலத்தைப் போர் செய்து காத்தவனே,  சிவன் மலை குழகா அழகிய வேலைக் கையில் கொண்டவனே எம்மைக் காத்தருள்வாயாக

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி