பாங்குதேசம் பலவடைந்து பார்திரிந்த போதிலு
மாங்குறைந்தி ருந்துணர்ந்து பட்டறிந்த போதிலு
மோங்கிநின்று வானுமண்ணும் பாங்களந்த நாதனாம்
வேங்கடேசன் வெற்படைந்த மேன்மைதேடு மாவியே
#கலிவிருத்தம்
பாங்கு தேசம் பல அடைந்து பார் திரிந்த போதிலும்
ஆங்கு உறைந்து இருந்து உணர்ந்து பட்டு அறிந்த போதிலும்
ஓங்கி நின்று வானும் மண்ணும் பாங்கு அளந்த நாதனாம்
வேங்கடேசன் வெற்பு அடைந்த மேன்மை தேடும் ஆவியே
இவ்வுலகைச் சுற்றி வரும்போது வெவ்வேறு பல அழகான தேசங்களைச் சென்று அடைந்த,அங்கே வசித்து அதன் நல்லது கெட்டதை அனுபவித்த போதும் , என் உயிரானது ஓங்கி உலகளந்த நாராயணனை அவன் வசிக்கும் திரு மலையைச் சென்றடைந்த மேன்மையை எண்ணிக் கொண்டிருக்கும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக