திங்கள், 12 ஆகஸ்ட், 2024

அஞ்சுகம் வெண்பா (மீனாக்ஷி)

அஞ்சுகங் கையேந்தி யஞ்சகங் காத்தருளு
நஞ்சகற்றி நாதர்க் கமுதாக்குங் - கொஞ்சுதமிழ்ப்
பாவிரும்பும் வேடமகள் பங்கற்கு வேறந்த
தேவிபுகழ் செப்பற்கே நாவு
#வெண்பா



அம் சுகம் கை ஏந்தி அம் சகம் காத்து அருளும்
நஞ்சு அகற்றி நாதர்க்கு அமுதாக்கும் கொஞ்சு தமிழ்ப்
பா விரும்பும் வேட மகள் பங்கற்கு வேல் தந்த
தேவி புகழ் செப்பற்கே நாவு

சுகம் - கிளி , சகம் - உலகு , வேட மகள் பங்கன் - முருகன் , நாதர் - சிவன்

 

அருணகிரிநாதர் கரத்தில் உள்ள கிளியாக ஏந்தி , இவ்வழகிய பாரைக் காத்தருளும் , தனது தலைவரான சிவ பெருமாற்கு உண்ட நஞ்சை அமுதாக மாற்றும் , கொஞ்சு தமிழ்ப்பாக்களை  விரும்பும் வேடர் குலத்து வள்ளி அம்மையின் கேள்வனான முருகற்கு வேல் தந்தருளியா தேவியான உனது புகழை உரைப்ப தற்கன்றோ நாவு ! 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி