திங்கள், 12 ஆகஸ்ட், 2024

மாடெடுத்து மரமெறிந்து கலி விருத்தம்

மாடெடுத்து மரமெறிந்து கனியுதிர்த்த தன்றியுங்  
கோடெடுத்து மாரிகாத்த  குடைபிடித்து மாக்கள்வா  
ணாடிழந்த வன்பரன்பு தூதனான மாயவன்
றேடிவந்து பத்தரின்ன றீர்த்துவுப்ப னையமே
#கலிவிருத்தம்

 

 

சீர் பிரித்து 


மாடு எடுத்து மரம் எறிந்து கனி உதிர்த்தது அன்றியும்
கோடு எடுத்து மாரி காத்த குடை பிடித்து மாக்கள் வாழ்
நாடு இழந்த அன்பர் அன்பு தூதனான மாயவன்
தேடி வந்து பத்தர் இன்னல் தீர்த்து உவப்பன் ஐயமே



கன்று குணிலா எறிந்து கனி உதிர்த்தான் , அது மட்டுமன்றி
விருந்தாவன உயிர்களெல்லாம்  வாழும் பொருட்டு மழைக்காக்க மலையைக்  குடையாய் பிடித்தான்,
நாடிழந்த பாண்டவர்களுக்குத்  தூதனாய் சென்றான் கண்ணன் , அவன் தேடி வந்து பத்தர் இன்னல்களைத்
தீர்த்து வைப்பதை விரும்பிச் செய்வான், இதில் ஐயம் ஏதும் உள்ளதோ?
தேடி வந்து பத்தர் இன்னல் தீர்த்து உவப்பன் ஐயமே 

படம்படம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...