அவனிக் கறுமுக னாறுதித்தா னன்று
சிவனுக் கருமகன் சீருரைத்தா னன்றா
யுவமைக் கொருபொரு ளாருரைப்பார் குன்றா
ளிவனுக் கிணையிவ னேறுடைத்தான் கன்றே
சீர் பிரித்து
அவனிக்கு அறுமுகன் ஆறு உதித்தான் அன்று
சிவனுக்கு அரு மகன் சீர் உரைத்தான் நன்றாய்
உவமைக்கு ஒரு பொருள் ஆர் உரைப்பார் குன்று ஆள்
இவனுக்கு இணை இவன் ஏறு உடைத்தான் கன்றே
பொருள்
உலகமுய்ய ஆறுமுகம் கொண்ட பரமன் கங்கை ஆற்றில் உதித்தான் அன்று ( முன்னொருநாள்) , அல்லது உலகுக்கு ஆறாக ( வழி காட்டும் பொருட்டு) உதித்தான் என்றும் கொள்ளலாம்
சிவனுக்கு அருமையான மகனான இவன் அவர்க்குப் பிரணவப் பொருளை உரைத்தான்
இவனுக்கு உவமைக்கு ஒரு பொருள் எவராலும் உரைக்க இயலுமோ?
ஏறு உடைத்த சிவனின் கன்றான குன்றுகளை ஆளும் இவனுக்கு இணை இவனே யாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக