வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

மாயப் பிறப்பறுக்கும் வெண்பா

மாயப் பிறப்பறுக்கு மாயவனை நீங்காத
தோயவன் மார்புறையுந் தூயவ - ணாயகன்
பேரதனில் பாதியிவள் பெற்றுளதால் பூசனைக
ணேரிவட்குச் செல்லு நிதம்

 

 சீர் பிரித்து

மாயப் பிறப்பு அறுக்கும்  மாயவனை நீங்காத
தோயவன் மார்புறையுந் தூயவள் - நாயகன்
பேர் அதனில் பாதி இவள் பெற்று உ(ள்)ளதால் பூசனைகள்
நேர் இவளுக்குச் செல்லும்  நி(த்)தம்

 

தோயவன் - நீரில் / பாற்கடலில் உறைபவன் - நாராயணன்

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி