அரனா ரகமகிழ் மைந்தா
அணியா றகமுறை நாதா
சிரமா றுடையுமை பாலா
சிகையார் மயிலமர் வேலா
மரையார் திருமகள் செல்வி
மனையாய் மணமகிழ் கோவே
திரையார் துயிலரி மருகா
துணையா ருயிருய வேறே
அறு சீர் விருத்தம்
அரனார் அகம் மகிழ் மைந்தா
அணி ஆறு அகம் உறை நாதா
சிரம் ஆறு உடை உமை பாலா
சிகை ஆர் மயில் அமர் வேலா
மரை ஆர் திரு மகள் செல்வி
மனையாய் மணம் மகிழ் கோவே
திரை ஆர் துயில் அரி மருகா
துணை யார் உயிர் உ(ய்)ய வேறே
பொருள்
சிவபெருமான் அகம் மகிழும் மைந்தனே
அழகான ஆறு படை வீட்டில் வீற்றிருப்பவனே
ஆறு சிரங்களை உடைய உமை அம்மை பாலனே
அழகிய சிகை உடைய மயிலை ஊர்தியாகக் கொண்டவனே
அழகிய மானாகஉருவெடுத்து வந்த திருமகள் பெற்ற மகளான
வள்ளியை மகிழ்ந்து திருமணம் செய்து கொண்ட அரசே
அழகிய பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் ஹரியின் மருகா
உயிர்களான நாங்கள் கதி பெற உனை அன்றி வேறு துணை யார் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக