வியாழன், 15 ஆகஸ்ட், 2024

கடல் துயின்ற கலி விருத்தம்

கடற்றுயின்ற மாதவா கடற்கடைந்த தெங்ஙனே
குடற்களைந்த சிங்கமாய் குதித்துவந்த தெங்ஙனே
கடற்கடந்தி லங்கைவீ ழலர்க்கணைக ளெங்ஙனே
படைத்தகால நேமியாய் புலர்ந்தகால முன்னுளே

கலி விருத்தம் 

சீர் பிரித்து

கடல் துயின்ற மாதவா கடல் கடைந்தது எங்ஙனே
குடல் களைந்த சிங்கமாய் குதித்து வந்தது எங்ஙனே
கடல் கடந்து இலங்கை வீழ் அலர்க் கணைகள் எங்ஙனே
படைத்த காலம்  நேமியாய் புலர்ந்த காலம் உன் உள்ளே

பொருள்

பாற்கடலில் துயில்கின்ற மாதவா நீ கடலைக் கடைந்து எத்திறம்
இரணியனின் குடலைக் களைந்து மாலையாய் அணிய தூணிலிருந்து குதித்த சிங்கமானது எவ்வாறு
கடல் கடந்து இலங்கை வீழ மலர்போன்று கணைகளைத் தொடுத்தாயே அது எங்ஙனம்
நான்முகனைப் படைத்தவன் நீ தான் என்பதனால் , மூலப் படைப்பாளி நீ தான் , அதனால் சக்கரதாரியான நீ தான் காலத்தையும் படைத்ததால் அக்காலமும் உன்னுள் அடங்குமன்றோ 

 

படம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...