வியாழன், 22 ஆகஸ்ட், 2024

காரார்முகில் கலிவிருத்தம்

காரார்முகில் கோவேதுணை தார்மார்பினி லுறைவா
ணீராலுனை நாளுஞ்சொரி கார்யானைக  ணடுவே
சீரார்மரை வீறாளுமை  நாராயணி யுனதா
டீராவினை சேராதெமை மாறாநிலை தருமே 

#கலிவிருத்தம் 

சீர் பிரித்து :-

கார் ஆர் முகில் கோவே துணை தார் மார்பினில் உறைவாள்
நீரால் உன்னை நாளும் சொரி கார் யானைகள் நடுவே
சீர் ஆர் மரை வீறு ஆளுமை நாராயணி உன தாள்
தீரா வினை சேராது எம்மை மாறா நிலை தருமே

பொருள் :-


நீரால் உன்னை நாளும் பூசை செய்யும் கரிய யானைகள் சூழ நடுவில் சீரான அழகிய தாமரை மலரின் மீது வீற்றிருக்கும் ஆளுமையான, அழகிய கார்முகிலைப் போன்ற தலைவனான திருமாலின் தாரணிந்த மார்பினில் உறைபவளான , நாராயணி ! உனது தாள் தீராவினை சேராமல் எம்மைக்  காத்து மாறா நிலையான வீட்டை அளிக்க வல்லவை அன்றோ !

 

May be an image of elephant and text 

 

திரு கேஷவ் அவர்களின் ஓவியம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி