புதன், 21 ஆகஸ்ட், 2024

உறுதியைக் கைவிடாது வெண்பா

உறுதியைக் கைவிடா துன்செயலை மேற்கொண்
டிறுதியை யீவா யிறைக்க - ணறுதித்
தரத்தாற் றமைக்குந் தடங்கலாய்த் தோன்றுஞ்
சிரத்தாற் றவன்கண் சினம்



உறுதியைக் கைவிடாது உன் செயலை மேற்கொண்டு
இறுதியை ஈவாய் இறைக்கண் அறுதித்
தரத்து ஆற்று அமைக்கும் தடங்கலாய்த் தோன்றும்
சிரத்து ஆற்றவன் கண் சினம்

ஒரு செயலைச் செய்யும் போது உறுதியைக் கைவிடாது மேற்கொண்டு
இறுதியை (பலனை) இறையின் கண் விட்டு விடுவாய் (ஏனென்றால்
முதலில்) தடங்கல் வருமாறு தோன்றினாலும் அறுதியாக அஃது நன்றாக
முடியும் (நாம் அறிந்து கொள்ள இயலாவாறு!) சான்றாக சிரத்தின் கண் ஆற்றை உடைய
சிவபெருமான் சினத்தால் மன்மதனை எரித்தார், இஃது தடங்கல் போல் தோன்றினாலும் ,
பின்னால் இதுவே தேவரையும் மனிதரையும் உய்யுமாறு சண்முகன் பிறப்பிற்கு வித்திட்டது  


படம்படம்படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...