ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

பிறப்புற்ற வெண்பா

பிறப்புற்ற செல்வந்தர் பெற்றமகன் சொல்கேட்
டறப்பற்று வேண்டி யரனைச் - சிறப்புற்ற
பாவா லலங்கரித்தார் பட்டினத்தா ரொற்றியூர்ச்
சாவா துறைந்தார் சிவத்து
#வெண்பா

 

சீர் பிரித்து 

 

பிறப்பு உற்ற செல்வந்தர் பெற்ற மகன் சொல் கேட்டு
அறப் பற்று வேண்டி அரனைச் சிறப்பு உற்ற
பாவால் அலங்கரித்தார் பட்டினத்தார் ஒற்றியூர்ச்
சாவாது உறைந்தார் சிவத்து

 

பொருள் 

பிறப்பால் செல்வந்தர் ( குபேரனின் அம்சம் என்று கருத்தப் படுகின்றார் ) , தனது மகன் ( ஈசனே மகனாக வந்தார் என்பது ஐதீகம்) " காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே" எனும் வாசகத்தைக் கேட்டு தனது பற்றை அறச் செய்ய சிவ பெருமானை சிறப்பான பாடல்களால் அலங்கரித்தார், அப்படிப் பட்ட சித்தரான பட்டினத்தார் திரு ஒற்றியூர் அடைந்து அங்கு சாகா நிலைப் பெற்று சிவ வெளியுடன் ஐக்கியமானார்   

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி