வியாழன், 29 ஆகஸ்ட், 2024

கன்றெறிந்து கலி விருத்தம்

கன்றெறிந்து கன்றுமேய்த்துக் குன்றெடுத்த கண்ணனா
சென்றுமீட்க பூமியாளைத் தந்தமேந்து பன்றியா
வென்றுபோர்கள் வீற்றுநின்றி ராமராம நாரணா
வின்றுமென்றுங் காக்கவெம்மை யுன்றனாசி நின்றதே
#கலிவிருத்தம்



கன்று எறிந்து கன்று மேய்த்துக் குன்று எடுத்த கண்ணனா
சென்று மீட்க பூமியாளைத் தந்தம் ஏந்து பன்றியா
வென்று போர்கள் வீற்று நின்று இராம ராம நாரணா
இன்றும் என்றும் காக்க எம்மை உன்றன் ஆசி நின்றதெ

கன்று வடிவில் வந்த அசுரனை எறிந்து, கன்றுகளை மேய்த்துக் குன்றம் எடுத்து மழையைக் காத்த கண்ணனாகவும், பூமி தேவியைச் சென்று மீட்க தந்தத்தால் ஏந்தி வரும் வராகமாகவும், போர் செய்து
வெற்றிகள் கண்டு அறத்தை நிலைநிறுத்திய இராம பரசுராமர்களாகவும் வந்த நாராயணனே !
உனது ஆசியானது இன்றுபோல் என்றும் எங்களைக் காக்க நின்றதன்றோ !

Lord Vishnu ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி