புதன், 28 ஆகஸ்ட், 2024

"வெட்டியாக" கலி விருத்தம்

வெட்டியாக வேலையின்றி வீற்றிருந்து நாளெலா
மிட்டமான காட்சிதேடி யிங்குமங்கு மலையவே
யெட்டிவானை நோக்கியாழ வேற்றமான பிம்பமாய்க்
குட்டியானை யென்றுநின்ற கொண்டலுள்ள மள்ளுமே



வெட்டியாக வேலை இன்றி வீற்று இருந்து நாள் எல்லாம்
இட்டமான காட்சி தேடி இங்கும் அங்கும் அலையவே
எட்டி வானை நோக்கி ஆழ ஏற்றமான பிம்பமாய்க்
குட்டி யானை என்று நின்ற கொண்டல் உள்ளம் அள்ளுமே

படம்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வள்ளியம்மை கலி விருத்தம்

வள்ளியம்மை நாதர்தந்த வடிவுயர்ந்த மொழியுனைப் பள்ளிசென்று பயிலவில்லை யென்றிருந்தும் பாவியேற் கள்ளியள்ளி யுன்னையீந்த வளவிலாத வமுதமா யுள்ளமொன்ற...