திங்கள், 2 செப்டம்பர், 2024

கந்தா கலி விருத்தம்

கந்தா நினைமறந்தாற் காதில் வலியுறுமே
தந்தா ளுனதருளைத்  தாச னிலைபெறவே
யிந்தா வினியதமி ழீதா யகமகிழ்ந்தே
செந்தே னெனவதனைச் சேய்த்தாட் சமர்ப்பணமே     



கந்தா நின்னை மறந்தால் காதில் வலி உறுமே
தந்து ஆள் உனது அருளைத் தாசன் நிலைபெறவே
இந்தா இனிய தமிழ் ஈதாய் அகம் மகிழ்ந்தே
செந்தேன் என அதனைச் சேய்த் தாள் சமர்ப்பணமே 

 

Murugan, Thiruchendur Murugan, HD phone ...

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...