ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

திருவிலங்கை வெண்பா

திருவிலங்கை தீயத் திருவிலங்கை யேவித்
திருவிலங்கை நீக்கத் திருந்தா திருவிலங்கை
யின்றுபோய் நாளைவா வென்றுரைத்து வென்ற
திருவிலங்கை நாமமே தீர்வு
#வெண்பா



திரு இலங்கை தீய திரு விலங்கை ஏவி
திரு விலங்கை நீக்க திருந்தாது இரு விலங்கை
இன்று போய் நாளைவா என்று உரைத்து வென்ற
திரு இலங்கு ஐ நாமமே தீர்வு

செலவச் செழிப்புடன் விளங்கிய இலங்கைத் தீவு தீயவும்  , திருமகளின் அருள் பெற்ற வானரமான ஆஞ்சநேயரை ஏவி  திருமகளின் கைதி நிலை (விலங்கு) விடியவும்  , வாய்ப்பளித்தும் திருந்தாத விலங்கு போன்ற மனப்பான்மை கொண்ட இலங்கையரசற்கு "இன்று போய் நாளை வா" என்று சொல்லி வென்ற, தன் மார்பில் திருமகள் எப்போதும் பிரகாசித்துக் கொண்டு இருக்கும் திருமாலின் அவதாரமான இராமரின் நாமமே அனைத்துக்குமான தீர்வாம் !

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி