சனி, 3 ஆகஸ்ட், 2024

மண் கடந்து கலி விருத்தம்

மண்கடந்து விண்கடந்து கண்கடந்த மாணியா
யொண்கடந்தி ருள்கடந்து வெளிகலந்த வுள்ளுமாய்
திண்கடந்து நுண்கடந்து சித்தினோட சித்தூமா
யெண்கடந்த வீசவுன்னை யாவர்காண வல்லரே   

 

மண்கடந்து விண்கடந்து கண்கடந்த மாணியா
யொண்கடந்தி ருள்கடந்து வெளிகலந்த வுள்ளுமாய்
திண்கடந்து நுண்கடந்து சித்தினோட சித்தூமா
யெண்கடந்த வீசவுன்னை யாவர்காண வல்லரே   

 

மண்ணைக் கடந்து விண்ணைக் கடந்து கண்ணுக்கு எட்டும் தூரம் கடந்த பிரமச்சாரியாய் வந்தவனே (வாமனன்)
ஒளி இருள் வெளி உள் என அனைத்தையும் கடந்தும் அனைத்திலும் வியாபித்தும்  உள்ளவனே நுண்மை , திண்மை என்ற இரு நிலையையும் கடந்து சித்து அசித்து என்ற இரு வேறாகவும் உள்ள, எண்ணத்துக்கு அப்பாற்பட்ட ஈசனே உன்னை யாவர் காண வல்லார்?  

"விண்கடந்த சோதியாய்" என்னும் திருச்சந்த விருத்ததினை அடியொற்றி அமைந்தது 


Pin pageதிருமழிசையாழ்வார் - The history of srivaishnavam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...