ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

திருவிலங்கை கலி விருத்தம்

திருவிலங்கை நோக்கழிக்கத்  திறனுடைத்த ளாயினுந்
திருவிலங்க னாதர்வந்து செருவிலங்கை வென்றிடத்
திருவிலங்கை யேற்றுவந்த பொறையுடைத்த தேவிநீ
திருவிலங்கை கருவிலங்கை யிருமைநீக்கி வீடளீ



திரு இலங்கை நோக்கு அழிக்க திறன் உடைத்தள் ஆயினும்
திரு விலங்கல் நாதர் வந்து செரு இலங்கை வென்றிடத்
திரு விலங்கை ஏற்று உவந்த பொறை உடைத்த தேவி நீ
திரு விலங்கை கரு விலங்கை இருமை நீக்கி வீடு அளி  

விலங்கல் - மலை
திரு விலங்கு - பொன்னால் ஆன விலங்கு (நல்லூழ்)
கரு விலங்கு - இரும்பால் ஆன விலங்கு  (வல்லூழ்)

இலங்கை என்னும் தீவை நோக்கால் அழிக்கத் திறன் பெற்றிருந்தும்
உனது நாதனான வேங்கடவன் ( இராமன்) வந்து செருச்செய்து இலங்கை
வேந்தனை அழித்து வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக
பொறுமையுடன் சிறைவாசம் மேற்கொண்ட தேவியான திருமகளே ( சீதை)
பொன்விலங்கும் இரும்பு விளங்கும் ஆனா இருவினைகளை அழித்து எமக்கு
வீடளிப்பாயாக  


படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...