தானைத் தலைவன் தளிர்புரையுந் தாள்பணிந்
தானைத் தலைவ னழகுமுக மாறாழ்ந்து
மோனைத் தொடையழகின் முந்தெதுகை சேர்ந்தமையத்
தேனைக் குழைத்துரைப்போந் தீந்தமிழாற் செவ்வேட்கே
சீர் பிரித்து
தானைத் தலைவன் தளிர் புரையும் தாள் பணிந்து
ஆனைத் தலைவன் அழகு முகம் ஆறு ஆழ்ந்து
மோனைத் தொடை அழகில் முந்து எதுகை சேர்ந்து அமையத்
தேனைக் குழைத்து உரைப்போம் தீந்தமிழால் செவ்வேளுக்கே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக