செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

தலைபத்துதிர கலி விருத்தம்

தலைபத் துதிரக் கணைவிட் டவரா
மலையிற் றுயிலுந் திருமான் மருகா
நிலையற் றுழலும் விதிபற் றடியேன்
கலியைக் களையுங் கவிபற் றருளே 



தலை பத்து உதிர கணை விட்டவராம்
அலையில் துயிலும் திருமால் மருகா
நிலை அற்று உழலும் விதி பற்று அடியேன்
கலியைக் களையும் கவி பற்று அருளே 

பத்துத்  தலை இராவணனை ஒரு கணை விட்டழித்த , பாற்கடலில் துயிலகின்ற திருமாலின் மருகனே , நிலயற்று உழலும் விதியின் பிடியில் அகப்பட்டுள்ள அடியேற்கு கலியின் தீமையைக் களையும் கவியின் (கந்தரநுபூதி போன்று)  பற்றை அருள்வாயாக  

கந்தரநுபூதி சந்தத்தை ஒற்றி அமைந்தது 


முருகனை வழிபட்ட ராமர் ...

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி