செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

கூன்பிறையை வெண்பா ( செவ்வாயிற் செவ்வேள்)

கூன்பிறையை யார்சூடுந் தான்றோன்றிப் பேரொளியான்
வான்றோன்றற் காக்க வரமளித்துத் - தான்றோன்றிச்
சண்முகனாய் நின்றது நற்பேறாம் போற்றியவன்
ஒண்முகத்திற் கோதொரு  பாட்டு 


சீர் பிரித்து

கூன் பிறையை ஆர் சூடும் தான் தோன்றிப் பேர் ஒளியான்
வான் தோன்றல்(ஐ) காக்க வரம் அளித்துத் தான் தோன்றிச்
சண்முகனாய் நின்றது நற்பேறாம் போற்றியவன்
ஒண் முகத்திற்கு ஓது ஒரு பாட்டு 

பொருள்

அழகிய கூன் பிறையைச் சூடும் தானே பேரொளியாய் தோன்றிய (அண்ணாமலையார்- சிவ பெருமான்)
வானவரைக் காக்க (தானே வருவேன் என்று )வரம் அளித்துத் தானே சண்முகனாகத்  தோன்றி நின்றது (நமக்குப்) பெரும் பேறாம் (ஆதலால்) அவனது ஒளி பொருந்திய முகத்தைப்  போற்றி ஒரு பாடல் ஓதுவோமாக !

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி