கருணா நிதியே கனிமொழி பாடு
மருணான் மறையின் பழநீ - திருவா
ரெமிராமச் சந்திர னின்ப மருகா
சமரா செயலலி தா
சீர் பிரித்து
கருணா நிதியே கனிமொழி பாடும்
அருள் நான் மறையின் பழம் நீ திரு ஆர்
எம் இராமச்சிந்தரன் இன்ப மருகா
சமரா செயல் அல்லி தா
பொருள்
கருணையால் நிரம்பியவனே கனிமொழியான தமிழ் பாடும்
அருள் நான் மறையின் பழம் ( இரசம்) நீ ! அழகிய திருவை
உடைய எமது இராமச்சந்திர மூர்த்தியின் இன்ப மருகனே
போர்த்தலைவா சேற்றில் வளரும் தாமரையைப் போன்ற உனது தாளை எமக்குத் தா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக