செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

பழமாலை வெண்பா

பழமாலை யேந்தும் பழையோனை வேண்ட
நுழையாதே யெந்நாளுந் துன்ப - மழைமேக
மன்ன வருளு மரிமருகன் வீற்றிருக்க
வென்ன கவலை யெமக்கு

 

 

பிள்ளையார்... முருகன்... துர்கை | chadhurthi - hindutamil.in

சீர் பிரித்து


பழ மாலை ஏந்தும் பழையோனை வேண்ட
நுழையாதே எந்நாளும் துன்பம் மழை மேகம்
அண்ணா அருளும் அரி மருகன் வீற்று இருக்க
என்ன கவலை எமக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி