கடன்மேவிய நெடுவேதனை கடும்வாழ்வெனை விடுமோ
குடன்மேவிய நெடுவேதனை குறைந்தாற்சுகம் வருமே
கடன்மேவிய நெடுமால்வரை கடைந்தான்கழல் கிடைத்தாற்
குடன்மேவிய நெடுவேதனை கொடும்வாழ்வறு நிசமே
சீர் பிரித்து
கடன் மேவிய நெடு வேதனை கடும் வாழ்வு எ(ன்)னை விடுமோ
குடல் மேவிய நெடு வேதனை குறைந்தால் சுகம் வருமே
கடல் மேவிய நெடு மால் வரை கடைந்தான் கழல் கிடைத்தால்
குடல் மேவிய நெடு வேதனை கொடும் வாழ்வு அறும் நிஜமே
பொருள்
கடனால் சூழப்பட்ட வேதனை தரும் கடும் வாழ்வு என்னை விடுமோ ?
குடல் மேவிய நெடு வேதனை ( வயிற்று வலியால் படும் அல்லல் - பிணிகளுக்குக் குறியீடு) கொஞ்சம் குறைந்தால் நிம்மதி / சுகம் கிடைக்கும்
கடல் மேவிய பெருமைக்குரிய தனித்துவமான மேரு மலையை வைத்து அந்நாளில் கடைந்தவனின் (திருமாலின்) தாள் கிடைக்கப் பெற்றால்
குடல் மேவிய நெடு வேதனை (பிறப்பு இறப்பு என்ற சுழற்சி அற்று) அக்கொடும் வாழ்வு தொலைந்து நித்திய வீடு கிடைக்கப் பெறும்
திருமாலின் திருவடி என்னும் பதத்தை அடைந்தவர்கட்கு செல்வம், ஆரோக்கியம் போன்ற இக சுகங்கள் மட்டும் அன்றி பர சுகமான வீடும் கிடைக்கப் பெறும் என்பதாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக