ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

எட்டெழுத்து கலி விருத்தம்

எட்டெழுத்து நித்தமோதி யிட்டமான பூசைசெய்

விட்டுபத்தர் வேதமோதி செய்துவந்த மஞ்சனம்
 
பட்டுடுத்து போதுமாது தொட்டணைத்த கோலமா
 
கட்டவாக்க விச்வரூப சிங்கவேளின் காட்சியே
 
 
 
எட்டெழுத்து மந்திரத்தை நித்தம் ஓதி இஷ்டமான பூஜை செய்யும் விஷ்ணு பக்தர்கள்  வேதம் ஓதி செய்து உவந்த திருமஞ்சனம் பட்டுடுத்து தாமரையில் என்றும் அமரும் இலக்குமி தேவி தொட்டு அணைக்கும் கோலத்தில் கட்டவாக்க விஸ்வரூப சிங்கவேளின் காட்சி அமைகின்றது 
 
படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி