வெள்ளி, 13 செப்டம்பர், 2024

வினையெச்சம் கலிப்பா

 வினையெச்சம் பெயரெச்சம் விடிவிக்குங் காரணமாய்

 வினைமுற்றா யுயிர்காக்கு மெய்யான பெயர்ச்சொல்லாய்

விதிவகுத்து விதிவிலக்கி விரிசுடரா யல்வழியாய்ப்
 
பதமளித்தா யிருவகையாய்ப் பயனிலையாய் வேற்றுமையா
 
யிடுகுறியாய்க் காரணமா யியலிசையாய் நாடகமாய்
 
வடதிசையாய்த் திரியுரியா யியலான முன்னிலையாய்ப்
 
பொருளணியாய்ச் சொல்லெழுத்தாய்ப் போற்றிசைக்கும் யாப்புமதா
 
யருளணியே யறுமுகனே மதிநிறையு மழகுருவே
 
தெருளளிக்கு மெழுவாயே செந்தமிழின் சேயோனே
 
 
 
May be an image of 2 people, temple and text 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி