திங்கள், 30 செப்டம்பர், 2024

திருப்பாவை ஜீயர் வெண்பா

திருப்பாவை சீய ரொருபாவை யெண்ணி
யிருப்பாவை பின்னை யெனவே - சிறுப்பாவை
தாளிற் சிரந்தாழ்ந்த வுந்து மதகளிற்ற
னாளு நவின்றுய்வோ நாம்

திருப்பாவை சீயர் ஒரு பாவை எண்ணி
இருப் பாவை பின்னை எனவே சிறுப் பாவை
தாளில் சிரம் தாழ்ந்த உந்து மதகளிற்றன்
நாளும் நவின்று உய்வோம் நாம்

 உந்து மத களிற்றன் எனும் திருப்பவையைச் சேவித்த படி ஒரு முறை திருப்பாவை ஜீயர் (இராமானுசர்) திருக்கோட்டடியூர் வந்த போது , செந்தாமரைக் கையால் சீரார் வலை யொலிப்ப என்ற வரி அனுபவித்த படி இருந்த போது தமது குருவின் திருப்புதல்வி அத்துழாய் கதவைத் திறந்தார் , அவரை நப்பின்னை பிராட்டியாக பாவித்து எம்பெருமானார் சேவித்து வணங்கினார், அப்பேற்பட்ட பாசுரத்தை நாமும் நாளும் சேவித்து உய்வோமாக

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி