திங்கள், 30 செப்டம்பர், 2024

உடையவர் வெண்பா

உடையவர் பாதை யுடையவர் பாத
முடையவர் பெற்றா ருயர்வு - தடையவர்க்
கில்லை திருவவர் கொள்ளை திரும்பாரே
தொல்லை யிருமைமய வாழ்வு
#வெண்பா



உடையவர் பாதை உடையவர் பாதம்
உடையவர் பெற்றார் உயர்வு தடை அவர்க்கு
இல்லை திரு அவர்(க்குக்) கொள்ளை திரும்பாரே
தொல்லை இருமை மய வாழ்வு

 

உடையவரின் பாதையைப் பின்பற்றுபவர் பாதம் பணிந்து வழி நடப்பவர்கள் உயர்வைப் பெற்றார் , அவர்களுக்குத் தடை என்பது இல்லை திரு ( செல்வம்) அவர்களுக்கு மிகுதி , அதைத் தவிர இருமை நிரம்பிய இப்பிறவிக்கு அவர் திரும்பார் ! 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி