செவ்வாய், 1 அக்டோபர், 2024

உண்மை வெண்பா செவ்வாயிற் செவ்வேள்

உண்மைப் பொருளா யுலகாளுந் தத்துவந்
திண்மைப் பொருளாய்த் திருவெடுக்கக் - கண்மை
நிறத்தான் றிருநீங்கா நேயன் மருகன்
செறித்தான் சிவசத்தி மைந்து 

 

 

உண்மைப் பொருளாய் உலகு ஆளும் தத்துவம் 

திண்மைப் பொருளாய்த் திரு எடுக்க - கண்மை 

நிறத்தான் திரு நீங்கா நேயன் மருகன் 

செறிந்(த்)தான் சிவ சத்தி மைந்து  

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...